சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சட்டமன்ற அலுவலகங்கள் அனைத்தும் மூடும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனின் அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகே அமைந்துள்ளது. இதனை நேற்றைய தினம் அதிகாரிகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைத்தையும் அகற்றினர்.


