பேட்மாநகரம் காட்டுப்பகுதியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசி பறிமுதல். அதிகாரிகள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து அதனை இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு வருவாய்த்துறை அதிகாரிகள் பேட்மாநகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேட்மாநகரம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி குடோனில் 4.7 டன் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த ரேசன் அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்த இருப்பது தெரிய வந்தது. உடனே ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


