வி.எம்.சத்திரத்தில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கருங்குளம் வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் உத்தரவின் பேரில் கருங்குளம் வட்டார விவசாயிகளை வி.எம்.சத்திரம் பட்டு புழு வளர்ப்பு செயல்விளக்க பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பயிற்சியில் பட்டுப்புழு வளர்ப்பு செயல்விளக்க பயிற்சி மையத்தின் இளநிலை ஆய்வாளர் டயானா பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் மற்றும் பட்டு புழுக்களின் ரகங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் பட்டு புழு உணவிற்காக வளர்க்கப்படும் மல்பெரி செடிகள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக்க எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜேசுதாசன் மற்றும் தொழில் நுட்ப மேலாளர் பகவதிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


