தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல்நிலையத்திற்கு பின்பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல்நிலைய காவலர்கள் குடியிருந்து வரும் காவலர் குடியிருப்பு உள்ளது.
இந்த நிலையில் இன்று அந்த காவலர் குடியிருப்பு பகுதியில் ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் குடியிருப்பில் குடும்பத்தினை சந்தித்து அவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் குறைகளை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து குடியிருப்பின் மாடியில் உள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


