
ஆழ்வார் தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நடந்து வருகிறது. கடந்த 17 ந்தேதி முதல் பேரணி, பயிலரங்கம் என பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
ஆட்சி மொழிச் சட்டம் கடந்த 27.12.1956 ல் உருவாக்கப்பட்டதையொட்டி, அதன் 70 வது வருடம் தமிழ் வெல்லும் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.
ஆழ்வார் தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் நடந்த கருத்தரங்குக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். கிராமஉதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். திருக்குறள் அன்பழகன், எழுத்தாளர்கள் மணிமொழிச்செல்வன், மாரிமுத்து, காளிமுத்து, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். தமிழ்வளர்ச்சித்துறை உதவியாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் பெ. இளங்கோ தலைமையில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் செய்திருந்தது.


