வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுவட்டாரத்தில் 24 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கும் மையங்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வல்லநாடு பேருந்து நிலைய முகாமில் வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திர முருகன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் ஜான் ஜெபஸ்டின், வல்லநாடு சமூக ஆர்வலர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் ஜாகிர் நன்றி கூறினார். முகாமில் சுகாதாரத்துறையினர் அங்கன்வாடி பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.