தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 414 பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புபுற உள்ளாட்சி தேர்தல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ ஆணையின்படி கால அட்டவணையின்படி நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பின்வரும் நகர்ப்புற உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களின் 414 பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.
வார்டுகள் எண்ணிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி 60
கோவில்பட்டி நகராட்சி 36
காயல்பட்டிணம் நகராட்சி 18
திருச்செந்தூர் நகராட்சி 27
ஆத்தூர் பேரூராட்சி 15
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 18
ஆறுமுகநேரி பேரூராட்சி 18
கானம் பேரூராட்சி 12
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி 15
தென்திருப்பேரை பேரூராட்சி 12
உடன்குடி பேரூராட்சி 18
சாத்தான்குளம் பேரூராட்சி 15
நாசரேத் பேரூராட்சி 18
ஏரல் பேரூராட்சி 15
பெருங்குளம் பேரூராட்சி 15
சாயர்புரம் பேரூராட்சி 15
எட்டையாபுரம் பேரூராட்சி 15
கயத்தாறு பேரூராட்சி 15
கடம்பூர் பேரூராட்சி 12
விளாத்திகுளம் பேரூராட்சி 15
புதூர் பேரூராட்சி 15
கழுகுமலை பேரூராட்சி 15
மொத்தம் 414
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை 28.01.2022 அன்று காலை 10.00 மணி முதல் தொடர்புடைய மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி அலுவலகங்களில் தொடர்புடைய வார்டுகளுக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்யலாம்.
தேர்தல் விதிமுறை மீறல்கள் இருப்பின் அதனை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் 3 குழுக்கள் கொண்ட 4 பறக்கும் படைகள் என மொத்தம் 12பேரும், கோவில்பட்டி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் நகராட்சிகளில் தலா ஒரு குழுவும் பேரூராட்சிகளில் 8 படைகள் வீதம் மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படைகள் என மொத்தம் 45பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
மேலும் பறக்கும்படைகள் தவிர்த்து தேர்தல் விதிமுறை மீறல்கள் இருப்பின் அதனை கண்காணிக்க பின்வரும் விவரப்படி உதவி இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் நிலையில் வட்டார தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்டார தேர்தல் பார்வையாளர்கள்
தூத்துக்குடி மாநகராட்சி – 4
கோவில்பட்டி நகராட்சி – 1
காயல்பட்டிணம் நகராட்சி – 1
திருச்செந்தூர் நகராட்சி – 1
பேரூராட்சிகள் 18 (பேரூராட்சிக்கு தலா 1 வீதம்)
மொத்தம் 25
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சிறப்பாக நடத்துவது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக முன்னோடிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 27.01.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் (பயிற்சி), வருவாய்க் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாது பின்பற்றவும், அனைத்து வாக்குச்சாடிவகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சி சார்பான விளம்பரம் / சுவர் விளம்பரங்களை அழித்தல் மற்றும் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல் பணிகளை இரண்டு தினங்களுக்குள் முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் அனைத்து நிலை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சுமூகமாக நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டன