பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
பெங்களூரில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினர். மேலும், மாணவர் பிரைட்டன் சாமுவேல் முதல் பரிசையும், சிவா, அண்ட்சன் 3வது பரிசினையும் வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைைத்த மாணவர்களையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனையும் தலைமை ஆசிரியர் ஞானசீலன்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்