வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் தலை பண்ணை கபடி அணி முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இளைஞர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் போன்ற வைரஸ் நோய்களின் அச்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகஇந்திய அரசு நேரு யுவகேந்திரா, தாமிரபரணி மக்கள் மன்றம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி ஆத்தூர் அருகே உள்ள குச்சிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் மன்றங்களுக்கான குழு விளையாட்டுப் போட்டியில் கபடி, வாலிபால், கால்பந்து மற்றும் தனிநபர் காண போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் இளம் பெண்களுக்கான குழு போட்டியில் கயிறு இழுத்தல், கோ – கோ பெண்களுக்கான தனிநபர் போட்டியில் மியூசிக்கல் சேர், ஒற்றைக்கால் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.கபடி போட்டியில் தலைப்பண்ணை ராஜ் முருகானந்தம் கபடி அணி முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது பரிசை ஆத்தூர் ஸ்கூல் பாய்ஸ் அணி பெற்றது. வாலிபால் போட்டியில் ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் இளைஞரணி முதல் பரிசையும், குச்சிக்காடு இளைஞர் அணி இரண்டாவது பரிசையும் பெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா பல்நோக்கு அலுவலர் ஆர் இசக்கி கருத்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக மேல் ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். விளையாட்டு போட்டியின் நடுவராக நடராஜன், பாலாஜி ஆகியோர் செயல்பட்டனர். இதில் சமூக ஆர்வலர்கள் எம் . உமாரதி, ஹேமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப் போட்டியில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள்,இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக குச்சிக்காடு இளைஞர் மன்ற தலைவர் எம் ரகுராமன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய தேசிய இளையோர் தொண்டர் க. பிரியங்கா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் பி. காளிஷ் ஆதித்தன், எம் கலைவாணி மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தாமிரபரணி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.ஆத்தூரில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை மேலஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் வழங்கினார். அருகில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உள்ளார்