வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 18வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் முதல் 31.10.2021 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு உள்ள சோதனைச்சாவடியில் 10க்கும் மேற்பட்ட போலிசார் அனைத்து இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


