
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொற்கை அகழாய்வு பணியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகமாகவும், குதிரை ஏற்றுமதி இறக்குமதி இருந்தை உறுதிப்படுத்தும் விதமாக குதிரை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், அதே போல் ஒரு பெண்ணின் சுடுமண் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொற்கை அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொருட்கள் அகழாய்வு பணிக்கான வரலாற்றை தொடர்ந்து வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறது.