வித்தியாசம்_1
சுதந்திர தினம்: கொடிக்கயிற்றை கீழிருந்து மேல் நோக்கி இழுத்து, பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவே கொடி இவ்வாறு ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வானது “கொடியேற்றம்” (Flag hoisting) என அழைக்கப்படுகிறது.
குடியரசு தினம்: கொடியானது முன்னரே கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். பின்னர் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, கொடி பறக்கவிடப்படும். இதனை “கொடியை பறக்கவிடுதல்” (flag unfurling) என அழைப்பர்.
#வித்தியாசம்_2
சுதந்திர தினம்: சுதந்திரம் கிடைத்தபோது அரசியல், சட்டம் அமலுக்கு வரவில்லை. அதனால் அப்போது பிரதமர்தான் நாட்டில் முதல் மனிதராக (political head) கருதப்பட்டார். குடியரசுத் தலைவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தன்று பிரதமரே தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் ரேடியோ, தொலைக்காட்சியின் மூலமாக மக்களிடம் உரையாற்றுவார்.
குடியரசு தினம்: குடியரசு தினத்தன்று அரசியல், சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவரே தேசியக் கொடியை பறக்கவிடுவார்.
வித்தியாசம்_3
சுதந்திர தினம்: தேசியக்கொடியானது பிரதமரால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்படும்.
குடியரசு தினம்:
குடியரசுத் தலைவரால் டெல்லி ராஜ் பாத்தில் பறக்கவிடப்படும்.இவைகளே இரு வேறு தினங்களில் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் ஆகும்.