26.01.2022 புதன் காலை 8.00 மணியளவில் ஏரல்- விஸ்வகர்மா கலை வளாகத்தில் 73 வது ஆண்டு இந்திய குடியரசு தின கொடியேற்றம் விழா நடைபெற்றது.
பா ஜ தொழில் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துமாலை ஆச்சாரி தலைமை வகித்தார்.விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ,பொருளாளர் கற்குவேல் ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.சமூக ஆர்வலர் பாலு ஆச்சாரி தேசியக்கொடி ஏற்றினார்,வாய்ப்பாட்டு கலைஞர் கந்தன் ஆச்சாரி தேசிய பாடல்களை பாடினார்.யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார். பொன் வணிகர் பரமசிவம்.பொற்கலைஞர் மாரி,மாணவர்கள்,ஜெய ஹரிஸ்,முத்து ராம்,சந்தன ஹரிஸ்,சிவா,காவ்யா,இசக்கி சந்தியா,முத்து மணிகண்டன் போன்றோர் கலந்து கொண்டனர்.இது மூன்றாமாண்டு நிகழ்ச்சியாகும்.மதுரை மாயாண்டி பாரதி,வல்லநாடு சுடலை முத்து ஆச்சாரி, விருதுநகர் முத்துசாமி ஆச்சாரி போன்ற தியாகிகள் சிறப்புகளை எடுத்துரைக்கப்பட்டன..