பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் முஹம்மது சாதிக் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தேசியத் துணை இராணுவப்படை அதிகாரி முனைவர் செய்யது அலி பாதுஷா அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். கனரா வங்கியின் சிறப்பு பயிற்சி அதிகாரி அஞ்சு முன்னிலை வகித்து குடியரசு தினவிழாப் போட்டிகளான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, ஆகிய போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். குடியரசு தின விழாப் போட்டிகளைக் கல்லூரியின் இளைஞர் நலத்துறையும் கனரா வங்கியும் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் தேசிய அளவில் சாதனை புரிந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்வாண்டு பணி நிறைவு பெறக்கூடிய இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் முகமது அமீன் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாணவர் விடுதியிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை இளைஞர் நலத்துறை துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறை உதவி பேராசிரியருமான முனைவர் சாதிக்அலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அரசுதவி பெறா பாடப்பிரிவுகளின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ செய்யது முகம்மது காஜா, பகுதி 5 ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.மு அயூப்கான் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் செய்யது அலி அனைவருக்கும் நன்றி கூறினார்.