ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கரையோரம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 84வது பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சிவபெருமாள் தலைமை வகித்தார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி கொடி கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில், பாமக ஆறுமுகனேரி நகர செயலாளர் ஒத்தரசன், மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன், கட்சி நிர்வாகிகள் மாணிக்கம், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


