– பாளையங்கோட்டையில் நடந்த கவிஞர் தானப்பன் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் வண்ணதாசன் பங்கேற்று பேசினார்.
–
பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் அரங்கில் கவிஞரும், எழுத்தாளருமான தாணப்பன் எழுதிய ‘சுற்றந்தழால்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு பொருநை இலக்கிய வட்டப் புரவலர் தளவாய் நாதன் தலைமை வகித்தார். இனிய நந்தவனம் இலக்கிய வட்டத் தலைவரும் கவிஞருமான பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தார்.
செல்வி கல்கி ரமணி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கவிஞர் தச்சை மணி அனைவரையும் கவி நடையில் வரவேற்றுப் பேசினார். விழாவில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
*முதல் பிரதி*
முதல் பிரதியினை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஹரிஹரன் மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி இணைப்பேராசிரியர் மருத்துவர் பலராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர்.
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் சௌந்தர மகாதேவன், கவிஞர் ரமணி முருகேஷ் ஆகியோர் நூலினை திறனாய்வு செய்து பேசினர். எழுத்தாளர் நாறும்பூநாதன், முத்தாலங்குறிச்சி காமராசு, தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், ஓவியர் பொன் வள்ளிநாயகம். கலை இலக்கிய பெருமன்றம் முனைவர் மகாலட்சுமி, கூழாங்கல் அறக்கட்டளை டெல்பின் அற்புதராஜ். தாரங்கதாரா தொழிற்சாலை மேலாளர் ரவி, முதுநிலைப் பொறியாளர் அருண்குமார், ஓவியர் செல்வம், கோவில்பட்டி கவிஞர் பார்த்திபன், ராதாகிருஷ்ணன், நூலகர் அகிலன் முத்துக்குமார், உடுமலைப்பேட்டை வழக்கறிஞர் சத்யவாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
*ஏற்புரை*
நூலாசிரியர் கவிஞர் தாணப்பன் ஏற்புரை வழங்கினார். கவிஞர் சக்தி வேலாயுதம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழாவில் குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் குமார.சுப்பிரமணியம், எழுத்தாளர் தீன், சுவிஞர் சுப்ரா, தாமிரபரணி மாமன்றத் தலைவர் கவிஞர் பாமணி, திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ஜெயபாலன், சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தலைவர் சொக்கலிங்கம், தமிழ் நலக்கழகம் முரசொலி முருகன், பட்டு, எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம், காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி, கல்லிடை திருவருள் லத்தீப், எழுத்தாளர் மு.வே. ரா. சமூக ஆர்வலர் சுரேஷ் அஸ்வின், உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களும் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
கவிஞர் செ.ச.பிரபு நன்றி கூறினார்.


