தெற்கு காரசேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமசேவை மையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவி பேபி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுந்தரம் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் கருங்குளம் தலைமை மருத்துவ அலுவலர் கிருஷ்ணவேணி, சித்த மருத்துவ அலுவலர் ரதி, பல் மருத்துவர் விஜய வாணி, கார்த்திக், வல்லநாடு மருத்துவ அலுவலர் திலிப் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் தெற்கு காரசேரி மைதிலி, செய்துங்கநல்லூர் விவேகானந்த விஜயா, கருங்குளம் சந்திரகோமதி, பஞ்சாயத்து எழுத்தர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.