வல்லநாட்டில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியைகள் ரத்தினம், செல்வி, ராமசெல்வம், சிவகாமசுந்தரி, லட்சுமி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவியர் வல்லநாடு பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பதாகைகளையும் அட்டைகளையும் ஏந்தி வலம் வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.