கருங்குளம் வட்டார வள மையம் சார்பில் இல்லம் தேடி கல்வி இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.
கருங்குளம் ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் இல்லம் தேடி கல்வி இரண்டாம் கட்ட பயிற்சி கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லநாடு, தெய்வச்செயல்புரம், கருங்குளம், செய்துங்கநல்லூர் ஆகிய பகுதியில் இன்று நடந்தது.
ஆசிரியர் ஜோசப் வில்சன் ராஜ் மற்றும் கென்னடி, ஆசிரியர் பயிற்றுநர் ராஜேந்திரன், சிவசங்கரி, பீபேகம், வெயிலுமுத்து ஆகியோர் பயிற்சியினை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 183 தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உருவாக்கிய கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
பயிற்சியினை வட்டார வள மைய பொறுப்பாளர் ஜெயமேரி அற்புதம் ஏற்பாடு செய்திருந்தார்.