
சாத்தான்குளம் அருகே மாட்டை வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள உசரத்து குடியிருப்பு, இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்(50). இவரது மனைவி இசக்கியம்மாள்(45). பெருமாளுக்கும், அருகில் உள்ள பிரமாணவிளையை சேர்ந்த முருகேசன் மகன் பூமி என்ற சண்முகராஜ் (22) என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த20 நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பாக பூமி என்ற சண்முகராஜ், பெருமாளை அவதூறாக பேசியதுடன் பெருமாளின் மாட்டை பழிதீர்த்து கொள்வேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லத்துரை என்பவரது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பூமி என்ற சண்முகராஜ், அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மாட்டின் பின்னங்காலில் வெட்டு விழுந்து மாடு படுகாயம் அடைந்தது. இதுகுறித்து இசக்கியம்மாள், தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பென்சன், வழக்குபதிந்து சண்முகராஜை தேடிவருகிறார்.