கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று கொங்கராயகுறிச்சியில் உள்ள வீரபாண்டீஸ்வரர் சமேத பொன்னுறுதி அம்மாள் கோவில். இந்த கோவிலில் உள்ள பைரவர் சட்டநாதர் மிகவும் சிறப்பு பெற்றவர்.
இந்த கோவிலில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இன்றைய தினம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இதற்காக சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் சட்டநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால் குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கான பூஜைகளை குணசேகர பட்டர் செய்திருந்தார்.