தமிழ்நாடு வருவாய் ஊழியர்சங்கம் சார்பில் , ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். வட்டசெயலாளர் செ. சற்குணம் வரவேற்றார். வட்டபொருளாளர் தாமரை செல்வி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விஜயமூர்த்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பென்சன் திட்டத்தில் உள்ள முறன்பாடுகளை களைத்தெறிய வேண்டும். வாரிகளுக்கு வேலை தரவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இராமசாமி, வருவாய் துறை அலுவலர் சங்க வடட பொருளாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம உதவியாளர் சுப்பையா நன்றி கூறினார்.


