மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக 6வது மாநில அளவிலான தடகள போட்டிகள் சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியிலுள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர் பே.கருத்தபாண்டி இரண்டாவது இடம் பிடித்து டிசம்பர் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும் 19 வயதுக்கான மாணவர் பிரிவில் 3000 மீட்டர் ஓட்டத்தில் பே.மனோஜ் குமார் மூன்றாவது இடம் பிடித்துள்ளர். வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, தேசிய போட்டியில் கலந்து கொள்ள என்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாக மேயர் தெரிவித்தார். திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சுப்புலெட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பாரா விளையாட்டு சங்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.


