1901-ம்ஆண்டு நவம்பர்மாதம் 24-ம்தேதி
திருசுந்தரக்கோனார்
மாசனத்தம்மாள் தம்பதியர் 3வதுபுதல்வராக சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள முள்ளிக்குளம்என்றஊரில்பிறந்தார்
சங்கரன்கோவில் புளியங்குடி சாலையின் மையத்தில் அமைந்துள்ளது முள்ளிக்குளம்
அங்கே சாலையை ஒட்டி இருக்கின்ற இந்த பங்களாவை, அந்த வழியாகச் செல்கின்ற அனைவரும் பார்த்து இருக்கலாம்.
முள்ளிக்குளம் சுந்தரக் கோனார் அவர்கள்தான் இந்த வீட்டைக் கட்டினார்கள்.
அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள்.மூத்தவர் பாண்டியக் கோனார். அடுத்தவர் கண்டப்பிள்ளைக் கோனார். மூன்றாவதாக இராமசாமிக் கோனார். நான்காவது சங்கரநாராயணன்.
அவர்களது பூர்வீக வீடு முள்ளிக்குளம் ஊருக்கு உள்ளே இருக்கின்றது. நெல் மற்றும் விவசாயப் பொருட்கள், கருவிகளைச் சேர்த்து வைப்பதற்காகவும், ஆடு, மாடுகள் பராமரிப்பிற்காகவும் இந்த வீட்டை சுந்தரக்கோனார் கட்டினார்கள். தொடக்கத்தில் ஒரு பகுதி கட்டினார்கள். பின்னர் விருந்தினர்கள் தங்குவதற்காகப் பல அறைகளைக் கட்டி விரிவுபடுத்தினார்கள்.
அவர்கள் வீட்டில் 100 க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. பால் மாடு, உழவு மாடுகள் தனித்தனியாக இருந்தன.இரண்டு கிடைஆடுகள் இருந்தன. கிட்டத்தட்ட 1000_ஆடுகள். அதை மேய்ப்பதற்காகவே இருபது பேர் வேலை பார்த்தார்கள்.
அந்தக் காலத்தில் 9 தனிக்குளங்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலம் இருந்தது
மூத்தவர் பாண்டியக் கோனாருக்கு ஒரே மகன். #சோமசுந்தரபாண்டியன். துணை ஆட்சியராகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர்.
இரண்டாவது கண்டப்பிள்ளைக்கோனாருக்கு சுந்தர்ராஜன், கோமதி என இரண்டு பிள்ளைகள். கோமதியின் கணவர்தான் யாதவ மகாசபை தலைவராக இருந்த பேரா தி.அ. சொக்கலிங்கம் அவர்கள்தான்
மதுரை யாதவர் கல்லூரியின் முதலாவது #முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்.
இராமசாமிக் கோனாருக்கு ஆதிலெட்சுமி, ஜானகி, சரஸ்வதி என மூன்று பெண் பிள்ளைகள்.
இராமசாமிக் கோனார் அவர்கள் 1923 ல் சட்டக்கல்லூரியில் பி.ஏ பி எல் பட்டம் பெற்றார்
திருநெல்வேலியில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் அரசியலிலும் இருந்தார்கள்.
திருநெல்வேலி #பால்பண்ணையைத் தொடங்கினார்கள். அது இப்போது அரசு நிறுவனம் ஆகி விட்டது.
நெல்லையில் மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் 1/1/1947ல்இருந்து 31/12/1956 வரை ஒன்பதுஆண்டுகள் செயளாராக இருந்துபெரும் பணி புரிந்தார்
குன்றக்குடி அடிகளார் தொடங்கிய #தெய்வநெறிக் கழகத்தின் தலைவராக திருநெல்வேலி அமைப்பில் இராமசாமி கோனார் இருந்தார். சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் மற்றும் திருநெல்வேலி_நெல்லையப்பர்_காந்திமதி அம்மன் ஆலயங்களின் #அறங்காவலராகப் பொறுப்பு வகித்தார்
இராமசாமிக்_கோனார் அவர்கள் பதினைந்துஆண்டுகள்.ஸ்ரீசங்கரநாராயணசுவாமி கோவில் தர்மகர்த்தா குழுத்தலைவராக1946 முதல் 1949 வரை இருந்துநற்பணிசெய்துள்ளார்.
மேலும்12/5/1947 முதல் தலைவராககொண்டு நெல்லைஜில்லா_யாதவசங்கம்ஆரம்பிக்கப்பட்டது.
நெல்லையில் உள்ளபாலகத்தை நிறுவினார்பேட்டையிலுள்ள இந்துக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டினார்
சங்கரன்கோவில் சங்கரநயினார் திருக்கோயிலில் திருப்பணி செய்தார் வக்கில்ஐயா.
செய்தபணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர் மக்கள் மரியாதை செய்தனர்
1952-நெல்லைநாடளும்மன்றதேர்தலில்போட்டியிட்டுவெற்றிவாய்ப்பைஇழந்தார்.
1962-சட்டமன்றதேர்தலில்குறைந்தவாக்குளில் 1447 வெற்றிவாய்ப்பைஇழந்தார்.
மாநில_தமிழ்சங்கத்தின் தலைவராகவும்இருந்துள்ளார்.
கட்டுரையாக்கம்
நல்லாசிரியர்
முனைவர் S A சங்கரன்
பட்டதாரி ஆசிரியர்
திருநெல்வேலி


