தூத்துக்குடி பெருமாள் கோவிலில் தூண்கள் நிலை நிறுத்தும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலை சுற்றிலும் 63 கல் தூண்கள் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல், நரசிம்மர் சன்னதி நிறுவுதல் உள்ளிட்ட ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலில் முதற்கட்டமாக 16 தூன்கள் நிலைநிறுத்தும் பணி இன்று நடைபெற்றது.

விழாவிற்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். முன்னதாக கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் தூண்களுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
விழாவில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் விஎஸ்ஏ ஜெயராமன், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சிவன் கோவில் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் ஆறுமுகம், பாலசந்தர், மந்திரமூர்த்தி, முருகேஷ்வரி, ஜெயபால், பவுர்ணமி பூஜை கமிட்டி தலைவர் நெல்லையப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


