தூத்துக்குடியில் செல்போன் கடையின் கதவை உடைத்து 5 செல்போன்களைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த மைதீன்பிச்சை மகன் பீா்மைதீன் (28). பள்ளிவாசல் வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவா், கடந்த 21ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். அடுத்த நாள் வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் கதவை உடைத்து 5 கைப்பேசிகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.


