தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் “இந்திய அரசமைப்பு தினம்” உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையையும் பேணி பாதுகாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் பொ வீரபுத்திரன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


