சாத்தான்குளம் கிறிஸ்தவ மக்களால் பெருகியது. எனவே சாத்தான்குளத்தினை பல பங்காக பிரித்தனர். 1882-ல் சொக்கன்குடியிருப்பு இப்பங்கிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. 1887-ல் புதூர்-பிரகாசபுரம் சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டது. இதனால் சாத்தான்குளம் பங்கில் 3584 கத்தோலிக்கர் இருந்தனர். இந்த பங்கில் 11 ஆலயங்கள் மற்றும் 7 சிற்றாலயங்கள் காணப்பட்டது. 80க்கு அதிகமான இணை ஊர்கள் இருந்தாலும் கூட, இங்கு மறை பணியாற்ற 12 உபதேசியார்கள் மட்டுமே இருந்தனர். 1890-ல் புதூர்-பிரகாசபுரம் பங்கு மீண்டும் சாத்தான் குளத்தோடு சேர்க்கப்பட்டது. அதன் பின் அந்த பங்கோடு சாத்தான்குளம் பங்கிலிருந்து சில சிற்றூர்களை இணைத்தனர். அதன் பயனாக புதிய பிரகாசபுரம் பங்கு, 1909-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்த பிரகாசபுரம் பங்கு தோற்றுவிக்கப்பட்ட பின்பு கிறிஸ்தவ விசுவாசிகள் பெருகி கொண்டே இருந்தனர் https://arcus-www.amazon.in/dp/B0CNW3HMNW/ref=sr_1_23?qid=1700802113&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-23


