நாடு முழுவதும் ஸ்வச் பாரத் என்ற தூய்மை பாரததூய்மை பணி நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் நாடுமுழுவதும் உள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட என்சி.சி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் என்.சி.சி தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டிணண்ட் கர்னல் பிரதோஷ் அவர்களின் உத்தரவின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள என்.சி.சி மாணர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முன்னிட்டு பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த நாட்களில் நடைபெற்றது.
இன்று உலக ஆறுகள் தினம் என்.சி.சி சார்பில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில் உலகமெங்கும் ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஆற்றின் முக்கியத்துவம் குறித்த பேரணி, ஆறுகளை தூய்மைப்படுத்துதல் , ஆறுகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துதல் போன்ற நிகழ்வுகள் இன்று ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரையோரத்திலும் வாய்க்கால்கள் கரை ஓரமாகவம் நடைபெற்றன. பேரணியை பள்ளித்தலைமை ஆசிரியர் முத்துசிவன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிகளை பள்ளி என்.சி.சி அலுவலர் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


