கீழ செக்காரகுடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ செக்காரகுடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். கீழ செக்காரகுடி மருத்துவர் ஜெயராணி திட்ட விளக்க உரையாற்றினார்.
இந்த முகாமில் ஸ்கேன், இசிஜி, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் ஆகியவை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி அய்யம் பெருமாள், சித்த மருத்துவர் சுப்பையா, சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார், வெங்கடேசன், ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், முத்துக்குமார், ஆஸ்வின், ஆகாஷ், ஜான் கிராம செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


