ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டாரத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள, நிலவள திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், கண்காணிப்பு செய்வதற்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து உயர்மட்ட குழு வருகை தந்தது.
இந்த குழு தாமிரபரணி பாசனத்தின் கீழ் தாமிரபரணி வடிநிலக் கோட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட செயல் விளக்கதிடல், மாதிரி கிராமத்தின் நிலங்களில் பயனாளிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள், உடனடி தேவை குறித்து கலந்து ஆலோசித்தது.
அதன் அடிப்படையில் கருங்குளம் வட்டாரத்தில் கால்வாய் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவரங்கபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒற்றை சாரள தகவல் மையத்தினை பார்வையிட்டனர்.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், விவரங்கள், அதன் பயன்கள், அதில் பயன்பெற்ற பண்ணை விவசாயிகளின் பண்ணை வருவாய் அதிகரித்தல் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை துறை, மீன்வளத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
நீர்வள நிலவளத் திட்ட மாநில வேளாண்மை ஆலோசகர் ஷாஜகான், சேரகுளம் விதை கிராம குழு மற்றும் கால்வாய் மாதிரி கிராம விவசாயிடமும் ஆலோசனை நடத்தினார். மேலும் திட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன், வேளாண்மை அலுவலர் காயத்ரி, துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம், உதவி வேளாண்மை அலுவலர்கள் நூர்தின், ரகுநாத், வெங்கடேஷ் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


