தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு, கருங்குளம் பகுதிக்கு உட்பட்ட கால்வாய் கிராமத்தை சார்ந்த 72 வயதுடைய காசநோயாளி காசநோய்க்கு கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இந்த காசநோயாளி நடக்க முடியாமல் ரத்த சோகை காரணமாக படுக்கையில் இருந்து மருந்து உட்கொண்டு வந்தார்.
72 வயதான இந்த காசநோயாளிக்கு வயதான மனைவி, கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி மகன், கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி மருமகள் ஆகியோருடன் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் (மாற்றுத்திறனாளிக்கு அரசு வழங்கக்கூடிய சிறிய அளவிலான உதவி தொகையுடன்)ஒட்டை உடசலான, மழை பெய்தால் ஒழுகும் நிலையிலுள்ள மண் சுவற்றிலான வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனைக்கு உள்நோயாளியாக சென்றால் உணவு வாங்கி சாப்பிடுவதற்கு கூட *(பணம் இல்லாததால்)* வழியில்லாததால் நோயாளியை அட்மிஷன் செய்யாமல் குடும்பத்தார் இருந்து வந்தார்கள்.
நோயாளியின் நிலைமையை வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக மாவட்ட காசநோய் மைய திருமுறை அமைப்பாளர் குப்புசாமி அவர்கள் மூலம் காசநோய் துணை இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) டாக்டர்.சுந்தரலிங்கம் அவர்கள் நோயாளியின் நிலையை அறிந்து, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்தும், அங்கு இருக்கும் வரை நோயாளியின் குடும்பத்திற்கு உணவுக்காக பொருளாதார ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக கூறினார்கள்.
இதனடிப்படையில் (24.06.2022) இன்று 108 அவசர ஊர்தி மூலம் நோயாளியை உள் நோயாளி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட காசநோயாளியை மாநகராட்சி அலகு – II காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மதியழகன் அவர்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற உதவி செய்து மாவட்ட காசநோய் மையத்தின் சார்பாக முதற்கட்டமாக வழங்கப்பட்ட ரூ.1,000/- உணவு தேவைக்காக நோயாளியின் மனைவியிடம் வழங்கினார்.
நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக உதவி புரிந்த அனைவருக்கும் வல்லநாடு காசநோய் பிரிவின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே நோயாளியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு 2022 மே மாதம் *சென்னை AAA Engineering & Consultants நிறுவனத்தின் சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு, ஒரு மாதத்திற்க்கு தேவையான ,அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


