ஆழ்வார்திருநகரியில் தூத்துக்குடி மாவட்ட தாம்ப்ராஸ் சங்கத்தின் “முப்பெரும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஶ்ரீ பாரங்குச கல்யாண மண்டபத்தில் தாம்ப்ராஸ் சங்கத்தின் “முப்பெரும் விழா நடைபெற்றது. மாநில பொது செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் அருள் ஆசி வழங்கினார். ராதே கிருஷ்ண சத் சங்கத்தினர் இறைவணக்கம் பாடினர். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஆத்தூர் ராஜா ராமன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பிராமண சமுதாயத்தின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திருச்செந்தூர் ராமன், சாரதா, தென்திருப்பேரை ரேவதி, ஆழ்வார்திருநகரி வேதவல்லி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் சுப கிருது வருட பஞ்சாங்கம் தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிளை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவில் தூத்துக்குடி, புதுக்கோட்டை,ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, ஆத்தூர், ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


