தாமிரபரணியில் மகா புஷ்கர விழா நடக்கும் போது பல போராட்டம் நிகழ்ந்தது. அதில் ஒரு முக்கிய போராட்டம் புஷ்கரம் என்பது உண்மையிலேயே இதற்கு முன்பு நடந்ததா? என கேள்வி எழும்பியது. அப்போது நான் எழுதிய தலைத்தாமிரபரணி நூலில் புஷ்கர விழா குறித்து நான் எழுதியதை மேற்கோள் காட்டினார்கள். இதன் பயனாக வேளாக்குறிச்சி ஆதினம் தொடர்பு கிடைத்து, தற்போது என்னை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதினகர்த்தாவிற்கும் அறிமுகம் செய்து வைத்தது.
அந்த அழகான நட்பை எனக்கு தந்தது தாமிரபரணி தான். ஆகவே தான் நான் மகா புஷ்கரம் 2018 ல் முடிந்தால் கூட வருடம் தோறும் குருபெயர்ச்சியின் போது தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவை நடத்தி வருகிறேன். தாமிரபரணி புஷ்கர திருவிழா வருடந்தோறும் நடைபெறும் ஒரே ஒரு தாமிரபரணி கரை முத்தாலங்குறிச்சி தான். காரணம் தாமிரபரணி தாய் இங்கு வடக்கிருந்து தெற்காக ஓடி குணவதி அம்மனை வணங்கி அதன்பின் சற்று கிழக்குநோக்கி திரும்பி மீண்டும் தெற்கு நோக்கி ஓடுகிறாள். இந்த அம்சமும் முத்தாலங்குறிச்சியில் மட்டுமே உள்ளது.
14.04.2022 அன்று சித்திரை புத்தாண்டு, குரு பெயர்ச்சி, அதுவும் வியாழக்கிழமை. குருபகவானுக்கு உகந்த நாள். தொடர்ந்து பிரதோஷம். சிறப்புக்கு மேல் சிறப்பான நாள். இந்த நாளில் வருடந்தோறும் தாமிரபரணி ஆற்றில் நடத்தும் புஷ்கர திருவிழாவை காலையில் 7 மணிக்கு முத்தாலங்குறிச்சி குணவதி யம்மன் அம்மன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் நதிக்கு பூஜை நடத்தினோம். செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றில் குருபெயர்ச்சி மற்றும் புஷ்கர திருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. குணவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் குருபெயர்ச் சியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா நடந்தது. பூர்ண கும்பம் ஊர்வலமாக எடுத்து சென்றோம். அதன்பின் தாமிரபரணிக்கு 21 அபிசேகம் செய்தோம். இறுதியாக பூர்ண கும்ப அபிசேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் கந்தசுப்பு, நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு), கிராம நிர்வாக அதிகாரி சக்தி விக்னேஸ்வரன், உதவியாளர் பாலகிருஷ்ணன், ஊர் பிரமுகர்கள் அங்கப்பன், முருகன், லெட்சுணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை , செந்தில் சகோதரர்கள் செய்திருந்தனர்.
வருடந்தோறும் தாமிரபரணி கரையில் சமூக சேவை புரிந்தவர்களுக்கு தோரண மலையான் விருது 2022 வழங்கப்படும். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டும் வழங்கப்பட்டது.
10 பேருக்கு தோரண மலையான் விருது வாங்கி கொடுத்தேன். நிர்வாகி செண்பகராமன் அய்யா என்னை வாழ்த்த வேண்டும் என்பதில் கவனமாய் இருந்து முருகனின் படத்தினை பரிசாக கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி னார்கள். அதோடு மட்டுமல்லாமல் என் சிஷ்யன் சுடலைமணி செல்வனுக்கு விருது கொடுத்து மகிழ்வித்தார்கள். மிக்க நன்றி அய்யா. தங்கள் தந்தை விட்டு சென்று அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள். தோரண மலை முருகன் உங்களோடு இருக்கிறார். நிச்சயம் நல்ல முறையில் வழி நம் அனைவரையும் வழிநடத்துவார். –
இறைபணியில் பொன்விழா கண்ட கே. ஆதிநாராயணன் நினைவு தோரண மலையான் விருது 2022 10 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையட்டி விவசாயிகள் மூலமாக தொண்டுகள் புரிந்தவர் களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது. சுதந்திரபேராட்ட வாரிசு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் தவசிமுத்து மாறன், இசை ஆசிரியர் இசக்கியப்பன், கோயில் திருப்பணியாளர் காசிமேஜர்புரம் சங்கரசட்டநாதன், சமூகசேவகர்கள் டெலிராஜா, கால்வாய் சிவா, ஆழிகுடி தினேஷ், தென்பத்து நந்தினி, மேலபுத்தனேரி சுகன், கலியாவூர் பரமசிவன், ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன், நானும் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) ஆகியோர் முன்னிலை வகித்தோம். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் சாதனையாளர்களை தேர்ந்தெடுக்க எனக்கு வாய்ப்பு தந்த தோரணமலை முருகன் கோயில் தர்மகர்த்தா செண்பகராமன் அய்யா அவர்களுக்கும், என்னோடு ஒத்துழைத்து விருது வாங்குவதற்காக பல கிலோ மீட்டர் பயணித்து வந்த விருதாளர்களுக்கும், தோரணமலை முருகனுக்கும். இந்த ஆசியை எப்போதும் எங்களோடு இருந்து வழங்கும் இறைபணியில் பொன்விழா கண்ட கே. ஆதிநாரயணன் அய்யா அவர்களின் குடும்பத்தாருக்கும் நன்றி நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து தாமிரபரணிக்கு பெருமை சேர்க்க வெளவால் தேசம் என்னும் நாவலில் நமது தாமிரபரணி கரை புகழ் பாடப்பட்டுள்ளது.
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் தற்போது வெளவால் தேசம் என்ற நாவலை சிறப்பாக எழுதியுள்ளார். அதில் தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி ஊரில் வாழ்ந்த கந்தசாமி புலவரை மிகச்சிறப்பாக சித்தரித்து எழுதியுள்ளார்கள். மிக சந்தோசமாக இருந்தது. தாமிரபரணி நதிக்கரை சம்பவங்கள் நாவலில் அதிகமாக வரவில்லையே என்ற ஏக்கம் என்னிடத்தில் உண்டு. அந்த ஏக்கம் தீர தாமிரபரணி கரையில் உள்ள பல சம்பவங்கள் இந்த நூலில் உள்ளது. அதில் சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முழு தகவலையும் பெற சோ. தர்மன் அய்யாவின் வெளவால்தேசத்தினை வாங்கி படியுங்கள். அடையாளம் பதிப்பகம் நூல் வேண்டுவோர் 04332273444, 9444772686. இந்த அருமையானநாவலை எழுதிய சோ. தர்மன் அய்யாவை வணங்குகிறேன்.
கட்டபொம்மனை தூக்கிட்ட பிறகு கூட அவர் புகழை பாடும் பலரை ஆங்கிலேயர்கள் கண்டு அவர்களுக்கு தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் புலவர் ஒரு கட்டபொம்மன் புகழை பாடிக்கொண்டு திரிந்தார். அவரை பிடித்து வந்து விசாரணை செய்தார் வெள்ளத்துரை. –
தன் எதிரே வந்து அமர்ந்துகொள்ளும்படி சைகை செய்தார் துரை. அவரை பிடித்துக் கொண்டுவந்த காவலர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்தார். பாஷை தெரியாததால் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாததால் உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். நெற்றியில் குங்குமம் திருநீறு. வெற்றுடம்பு முழுக்க திருநீற்றுப் பூச்சின் விரல் தடயங்கள். கழுத்தில் ருத்திராட்ச மாலை. தெளிவான பேச்சு. இம்மிகூட கவலையோ சந்தோஷமோ பயமோ அற்ற தெளிவான முகம். கிட்டுப்பிள்ளை கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தார். நின்றுகொண்டிருந்த காவலர்களை அருகில் உட்காரும்படி சைகை செய்தார்.
‘உம்முடைய பெயர் என்ன’
‘கந்தசாமிப் புலவர்’
‘ஊர், எந்த ஊர்
‘முத்தாலங்குறிச்சி
Ôவீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஊர்ஊராகப் பாராட்டி
பாட்டுப் பாடித் திரிந்ததாக காவலர்கள் உன்மீது குற்றம் சுமத்துகிறார்களே உண்மையாÕ ‘உண்மை, உண்மை, உண்மை. Ôவீரபாண்டிய கட்டபொம்மன் தேசத்துரோகி என்பதால்
அவனைத் தூக்கிலிட்ட விபரமும், அவனைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதும், அப்படிப் பேசினால் அது தேசத் துரோக குற்றம்
என்பதும் உமக்குத் தெரியாதா’
தெரியும் நன்றாகத் தெரியும்.’
என்றார் கந்தசாமி புலவர்.
(நதி வற்றாமல் ஓடும்)


