
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று கவுன்சிலர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் 2வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவர் சண்முகசுந்தரம், 8வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அருணாச்சல வடிவு, 12வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற ஏபிஎஸ் பிரேம்குமார் ஆகிய மூவரும் தூத்துக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அம்மா, அப்பா, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் பெருமாள், ஸ்ரீவைகுண்ட திமுக வை சார்ந்த சுபாஷ், சதீஷ், உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபன் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.