கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம். செய்துங்கநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கருங்குளம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் செய்துங்கநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் இன்றையதினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-&22 திட்டத்தின் கீழவல்லநாடு, செய்துங்கநல்லூர், சேரக்குளம், வல்லக்குளம் கிராம விவசாயிகளுக்கு தார்பாலின் விரிப்பு, துத்தநாக சல்பேட், ஜிப்சம் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
மேலும் அனைத்து கிராம விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளான இரும்பு சட்டி, கடப்பாரை, மண்வெட்டி, பண்ணை அருவாள், களைக்கொத்தி போன்ற கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட இடுபொருட்களை பெற விரும்பும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் கட்டாயமாக பதிவு செய்திட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செய்துங்கநல்லூர் மையத்தினை தொடர்பு கொண்டு தகுந்த ஆவணங்களை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் கேட்டுக்கொண்டார்.