தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த திருநெல்வேலி கீழ பாலமடை மூக்காண்டி மகன் பகவதி ராஜா, திருநெல்வேலி டவுண் குமார் பாண்டியன் மகன் மற்றும் சுந்தர் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகவதி ராஜா மீது திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்குகளும், எதிரி சுந்தர் மீது வி.கே புரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு என 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


