நமது தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி நமது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி கிராம உதயம் கோபாலசமுத்திரம் அமைப்பின் சார்பாக கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் V. சுந்தரேசன் அவர்கள் தலைமையில் இன்று கிராம உதயம் அலுவலகத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் S.புகழேந்தி பகத்சிங் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கிராம உதயம் நிர்வாக மேலாளர் திருமதி.மகேஷ்வரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் திருமதி.இசக்கியம்மாள் தன்னார்வ தொண்டர் திருமதி.முத்து லெட்சுமி அவர்கள் கருத்துரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கிராம உதயம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கிராம உதயம் 100 ற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் மூலமாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.