
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரம் பனை பொருள் உற்பத்தியாளர்கள் குழுக்கள் தொடக்க விழா நடைபெற்றது .
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம், திருவைகுண்டம்,
உட்பட 12 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரம் பனை பொருள் உற்பத்தியாளர்கள் குழுகள் துவக்க விழா சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு கிராமத்தில் சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பனைத் தொழிலாளர் ராஜேஸ்வர மூர்த்தி தலைமை தாங்கினார். வீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசியதாவது:-
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை மரங்களை பாதுகாக்க ஒரு கோடி பனை மரங்களை வழக்க கடந்த 4 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம் தற்போது வரை சுமார் 70 லட்சம் பனை மர விதைகளை வைத்துள்ளோம்.
பனை தொழிலாளர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் அதற்காக முதல் கட்டமாக பனை தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரம் பனை பொருள் உற்பத்தியாளர் குழு தொடங்க உள்ளோம். குழுவில் பனை தொழிலாளர்கள் மற்றும் பனை தொழில் செய்ய ஆர்வமும் உள்ளவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக ஆண் பெண் இருபாலரும் சேரலாம். உறுப்பினர்களுக்கு பனை தொழிலை மேம்படுத்துவதற்காக பனைப் பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுவதற்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பின் தொழில் செய்த அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுக் கொடுக்கப்படும்.. கடனுதவி பெற்று உறுப்பினர்கள் தயாரிக்கும், உற்பத்தி செய்யும் பனை பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். மேலும் பனை தொழிலாளர்களை பாதுகாக்க, மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கூறினார். இதில் பனைத் தொழிலாளர்கள் கே. பழனி, த. சித்திரைபழம் தேவராஜ் உட்பட பெண் பனை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பனைத் தொழிலாளர் எம் ராஜா அனைவரும் வரவேற்றார் முடிவில் பனைத் தொழிலாளர் த வேலையா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்