தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 428 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 690-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை மொத்தம் 59 ஆயிரத்து 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2ஆயிரத்து 254 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 75 வயது முதியவர், 74 வயது முதியவர் ஆகியோர் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 430-ஆக அதிகரித்து உள்ளது.


