பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி கோவில்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனராம். ரோச் பூங்கா அருகே உள்ள கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் மோகன் உயிரிழந்தார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்தை ஓட்டிச் சென்ற முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த முருகன்(60) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் முருகனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


