கோவில்பட்டி அருகே சாலையில் நடந்து சென்றபோது ஆட்டோ மோதிய விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டி முத்து நகரை சேர்ந்தவர் சின்னமாடன் மகன் மனோகரன் (60). இவர் கோவில்பட்டி-கழுகுமலை சாலையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது ஆட்டோ மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோ டிரைவர் கட்டாலங்குளம் சரவணபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மு. பழனிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


