தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த கப்பல் மாலுமியான மரடோனா (29), சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக நகர காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த அருள்வளன் மகன் சாம்டேவிட் (27) என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


