கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்பாள் சமேத வீரபாண்டிஸ்வர் திருக்கோவில் சனிப்பிரதோசம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையட்டி காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. மாலை 4.30மணிக்கு மகா சனிபிரதோசம் நடைபெற்றது. இதையட்டி சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. 9.30 மணிக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை குணசேகரபட்டர் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.


