தமிழகத்தில் நாட்டு நாய்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. எஜமானரின் மீதான விசுவாசத்தை எங்கு சுட்டிக் காட்டினாலும், அதில் ‘நாய் போல் நன்றியுள்ளவர்’ என்கிற வார்த்தை தவறாமல் இடம்பெறும். அதிலும் வேட்டை நாய்கள் எப்போதுமே வளர்ப்பவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படியும். ‘நாய் குரைத்து விடியுமா அல்லது கோழி கூவி விடியுமா’ என தென் மாவட்டங்களில் இளக்காரமான ஒரு பழமொழி உள்ளது. ஆனால், எட்டயபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள சில கிராமங்களில் பெரும் பாலும் நாய் குரைத்துதான் விடிகிறது.தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம், விளாத்திக்குளம் சுற்று வட் டாரங்களில் உள்ள சில கிராமங்கள் வேட்டை நாய்களின் வேடந்தாங்க லாகக் காட்சியளிக்கின்றன. சிலகிரா மங்களில் வீட்டுக்கு ஒரு வேட்டை நாய் என்பதெல்லாம் சர்வ சாதார ணம். ஒரு வீட்டில் 9 வேட்டை நாய் களை வளர்ப்போரும் இருக்கின்றனர். மட்டுமல்ல, ஒரே பிரசவத்தில் 12 நாய்க்குட்டிகளைக் காண்பதும் நிகழ் கின்றன. எட்டயபுரம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், சுரைக்காய்ப் பட்டி, புலிவாடு நாயக் கன்பட்டி, எத்திளப்பன் நாயக்கன்பட்டி, சிங்கி லிப்பட்டி, துறையூர். தீர்த்தாம்பட்டி, மீனாட்சிபுரம், ஜமீன் கோடாங்கிபட்டி, குருவார்பட்டி, டி.சண்முகபுரம் என பல கிராமங் கள் வேட்டை நாய்கள் வளர்ப்பில் வெற்றிநடை போடுகின்றன.
தமிழகத்தில் நாட்டு நாய்கள் என எடுத்துக்கொண்டால், சிப்பிப்பாறை (அ) கன்னி நாய்கள், ராஜபாளையம் நாய்கள், கோம்பை உள்ளிட்ட வகைகளே சிறப்பிடம் பெறு கின்றன. இதில் சிப்பிப் பாறை எனப்படும் நாட்டு நாய்கள், எட்டயபுரம் சுற்று வட்டாரங்களில் வேட்டை நாய்களாக ஆண்டாண்டு காலமாக வளர்க்கப் பட்டுவருகின்றன. வயலில் உள்ள பொந்தில் இருப்பது எலியா? பாம்பா? என வேறுபாடு காணும் மோப்பசக்தி கூட இத்தகைய வேட்டை நாய்களுக்கு உண்டு. 4 சிப்பிப்பாறை நாய்கள் கைகோர்த்தால் வனங்களில் உலா வரும் சிறுத்தையைக்கூட எதிர்க்க துணிந்துவிடும்.
“வெள்ளாமையும், வேட்டை நாய் களும் எங்க மண்ணுக்குக் கிடைச்ச பொக்கிஷங்க. இந்த கரிசல் மண்ணுல பருத்தி, மக்காச்சோளம்னு எந்த பயிர போட்டாலும் கடவுள் புண்ணியத்துல அது காசாயிரும். எங்க வயலுக்கும், வீட்டுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது இந்த வேட்டை நாய்ங்கதான். முன் பெல்லாம் முயலு, காட்டுப்பன்னி, நரின்னு காட்டுல கிடைக்கிறத வேட் டையாட இந்த நாய்களை ஏவிவிட் டோம். இப்ப வேட்டை நாய்ங்க எங்க வீட்டுல ஒருத்தராவே வளருதுங்க. ஒரு காலத்துல ஊத்துமல ஜமீனு, ‘வேங்கை’ நாய்கள் எட்டயபுரம் ஜமீனுக்கு பரிசாகொடுக்க, அதுல இருந்து வழி வழியா மாறி வந்ததுதான் இப்ப இருக்கிற சிப் பிப்பாறை நாய்களாகும். செம்பட்டை, மயிலை, சாம்பல் கலர்ல இந்த நாய் கள் இருக்கும். இதே நாய்கள் கருப்பா இருந்தா கன்னிநாய்ன்னு சொல்லு வாங்க. அதிலயும் செங்கன்னி, வெள் ளக்கன்னினு பிரிவுகள் உண்டு.
சிப்பிப்பாறை நாய்களுக்கு நல்ல சிறுத்தைய போல உடல்வாகு. நெஞ்சு இறக்கம், கூர்மையான பார்வை உண்டு. காட்டுக்குள்ள இந்நாய்கள உசுப்பிவிட்டா, அப்படியே கை காட்டுற முயலை லபக்குனு தூக்கிட்டு வந்துரும். ஆடு வளர்ப்பும் எங்க ஏரியாவுல அதிகம். ராத்திரி நேரம் வயல்ல கிடைய போட்டு ஆடுகளை அடைச்சிருவாங்க. கிடைக்கு இரண்டு சிப்பிப்பாறை இருந்தா, ராத்திரி நாம நிம்மதியா தூங்கலாம். ஒரு நரியோ, வெருவோ (காட்டுப்பூனை) கிடை பக்கம் எட்டிப் பார்க்காது. அப்படியே வந்தாலும் வேட்டை நாய்கள் துரத்தி அடிச்சிரும்…” என பூரிப்போடு விவரித்தார் சொக்கலிங்கபுரம் வேலுச்சாமி.
வேட்டை நாய்கள் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் பாதுகாப்பு. எஜமான விசுவாசத்தில் அவர்களுக்கு வரும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றுகின்றன. மரங்கள் அடர்ந்த தோட்டங்களில் எஜமான்கள் காற்றோட்டமாகப் படுத்திருக்கும் நிலை யில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாகக் குரைத்தே எழுப்பி விடும். எஜமானர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் வேட்டை நாய்களே தக்க பாதுகாப்பை நல்குகின்றன. எட்டயபுரம் அருகே உள்ள சித்தநாயக் கன்பட்டியில் இருந்து இரு மாடுகளை ஒருவர் திருடிக்கொண்டு விளாத் திக்குளம் சென்றபோது, மாட்டின் உரிமையாளரைக் காலால் சுரண்டி எழுப்பியது அவரது விசுவாசமிக்க வேட்டை நாய். மட்டுமல்ல, பின்னா லேயே துரத்திச்சென்று அவர் கால் நடைச் செல்வங்களை மீட்க உதவியது குறிப்பிடத்தக்கது.
வேட்டை நாய்களை முன்பெல்லாம் வேட்டைக்கு போகும்போது கூடவே அழைத்துச் செல்வர் காட் டில் வேட்டை முடிந்ததும், வேட் டையாடிய விலங்குகளைக் கையில் எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறிப் பயணிப்பர். வேட்டை நாய்களைக் கட்டவிழ்த்துவிட்டால், அவை பேருந் தின் பின்னாலேயே ஓடி ஊருக்கு வந்து சேர்ந்துவிடும். மேலும், தங்கள் பகுதி யில் இருந்து 50 கி.மீதூரத்திற்குள் எங்கு வேட்டை நாய்களை விட்டாலும் அவை ஊருக்கு வந்து சேர்ந்துவிடும் என்பது எஜமானர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வேட்டை நாய்க ளைத் தேர்வு செய்வதும் கிராமத்து மக்களுக்கு கைவந்த கலையாக இருக் கிறது.
“மொச பிடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியாதா என எங்க ஊர்க் காட்டுல ஒரு சொலவடை உண்டு. இங்குள்ள மக்கள் எப்பவுமே மூஞ்ச பார்த்தே வேட்டை நாய்களைக் கண்டுபிடிச்சிருவாங்க. தெருநாய் களவிட நல்ல உயரம், நெஞ்சு உள் வாங்குதல், காதுகள் மடிஞ்சிருத்தல், கண்முழியில திரட்சி, சுருளாத வால், குறைந்த ரோமம்னு வேட்டை நாய் கள செலக்ட் பண்ணித்தான் வாங்கு வாங்க. ஒரு பெண் நாய வளர்த்தா, அது வம்சம் முழுவதும் அந்த வீட் டிலேயே வளரும். வேட்டை நாய்கள வளர்க்கிறதுக்கு ஸ்பெஷல் மெனுவெல்லாம் வீட்டில் தயாரிக்க வேண் டியதில்லை. நாம் சாப்பிடற சோறு, கஞ்சி போன்ற ஐட்டங்களே போதும். நாய் குட்டியா இருக்கும்போது வேகமா ஓடுற துக்கு நல்ல வெள்ளாட்டுப் பால கறந்து கொடுப்பாங்க. அப்புறமா பச்சரிசி சோறு, கருவாட்டுக் குழம்பு, இளைப்பு இல்லாம ஓடுற துக்கு முட்டை மாதிரி யான உணவே போதும். பிடிகிரி உள்ளிட்ட பிர சித்த உணவுகள் எதுவும்
தேவையில்லை.
வாரம் ஒரு முறை யாவது நாய்க்கு நீச் சல் பயிற்சி அவசியம். அப்பயிற்சி இருந் தால் வேட்டையில வீரியம்கூடும். இப்ப காட்டு வேட்டை இல்லாட்டிகூட, நாய்களுக்கான பயிற்சிகளை யாருமே கைவிடறதே இல்லைங்க. தோட்டக் காவலுக்குக்கூட நாய்களுக்கு நல்ல பயிற்சி வேண்டியதிருக்கு….”என்றார் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ மகேஷ் (எ) பரமசிவம்.
வேட்டை நாய்களுக்குப் பெயர் வைப்பதிலும் கிராம மக்களுக்கு அலாதி பிரியம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அதைச்செல்லமாக அழைக்கும் வகையில், நாய்களின் பெயர்கள் இடம் பெறும்.கிராமங்களில் மனிதர்களின் பெயர்கள் போலவே, நாய்களின் பெயர்களும் நிலைத்து விடுகின்றன. அதிலும் துடிப்பான வேட்டை நாய்கள் மக்கள் மத்தியில் காலத்துக்கும் பெயர் சொல் கின்றன.
“எங்க கிராமங் களில் பெரும்பாலும் நாய்களுக்கு சாமிய குறிக்கிற பைரவா என்ற சொல்லே இடம் பெறும். கால பைரவருக்கு நாய் வாகனம் என்பதால் முன்னோர்கள் பெரும்பாலும் நாய்க்கு அந்த பெயரையே வைத்தனர். டைகர், தோனி, ராணி போன்ற பெயர்களைச் சொல்லியும் வேட்டை நாய்களை அழைப்போர் அதிகம். சினிமா தாக் கத்துல நாங்க எங்க நாய்க்கெல்லாம் போஸ் பாண்டி, லதா பாண்டி, வீரா, கொம்பன்னு பெயர் வச்சி அழைக்கி றோம். எங்க குடும்பத்துல மட்டுமே 9 நாய்கள வளர்க்கிறோம். கரம்பை, கன்னி (கருப்பு), புள்ளை, சந்தன புள்ளை கலர்ல எங்க நாய்ங்க தோட்டத் துக்கும். வீட்டுக் கும் நல்ல பாதுகாப்பு. காட்டுப்பன்றிங்கள வயல்வெ ளிக்கு வர விடாது. சிப்பிப் பாறை நாய்களுக்கு நல்ல வெயில தாங்கற சக்தி உண்டு. தெருவுக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் யாரையும் இந்தப்பக்கம் வரவிடாது. வேட்டை இல்லாட்டி கூட நாய்களை அடிக்கடி காலியான
இடங்களில் ஓட விட்டு பயிற்சி கொடுப்போம். அதுவும் ஆத்துமணல்ல ஓடுகிற நாய்ங்க சாதா ரண இடத்துல நல்லாவே ஓடும்…” என சிங்கிலிப்பட்டி சின்ன சங்குசாமி, சங்குபாண்டி, வேல்ராஜ், சங்குராஜ் உள்ளிட்டோர் வேட்டை நாய்களின் அருமைகளை விவரித்துக் கொண்டே சென்றனர்.
“வேட்டை நாய்களைப் பொறுத்த வரை பெண் நாய்களுக்கு தனி மதிப்பு உண்டு…” என்கிறார் டி.சண்முக புரம் சண்முகராஜ். மேலும் அவர், “வேட்டை நாய்கள பொறுத்தவரை யில் ஆண் நாய்கள விட பொட்ட நாய்க்கு மவுசு அதிகம்ங்க. காவல் காக் கிறதிலும் சரி, முழிச்சி இருக்கிறதுலே யும் சரி, பெண் நாய்ங்கள அடிச்சுக்க முடியாது. பெண் நாய்ங்க பிறந்து 10 மாதத்துல ஓட ஆரம்பிச்சிடும். ஆனா, ஆண் நாய்ங்க நல்லா ஓடறதுக்கு ஒன் றரை வருஷம் அவகாசம் எடுத்துக்கும். பெண் நாய்ங்க கருப்பிடிக்கிற காலத் துல 4 வருஷம் மட்டும் எந்த ஊசியும் அதற்கு போடமாட்டோம். சில சம யங்களில் ஒரு பெண் நாய் 8 முதல் 11 குட்டி வரை போடும்….” என பெண் நாய்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
கடந்த சில ஆண்டுகளாக ‘வேட் டைக்கான தடை’ பெரும் பாதிப் பையே ஏற்படுத்தி வருகிறது. வேட் டையாடப்படும் சில விலங்குகளின் கறிக்கு கிராமங்களில் இன்னமும் மவுசு இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக நரிக் கறி ஆஸ்துமாவுக்கு நல்லது எனக் கூறுகின்றனர். அதன் கறியைக் காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் மறைந்துவிடும். காட்டுப்பூனையின் கறி மூலத்திற்கு மருந்தாகும். முயல் ரத்தம் தடவினால் செம்பட்டை தலைமுடியும் கருப்பாகிவிடும் என்ற நம்பிக்கைகள் கிராமத்தில் இன்னமும் உள்ளன. தென்மாவட் டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் கள்ளிக்குடி காடு, கமுதி செவல்காடு, காரியப்பட்டி காடு, நாங்குநேரி காடு போன்றவை வேட்டை நாய்களின் களமாகவே இருந்தன. இப்போது வனத்துறையின் கிடுக்கிப்பிடி கார ணமாக வேட்டை குறைந்து விட்டது. வீரம் விளைந்த தமிழ்மண்ணில் வேட்டை நாய் களுக்குரிய இடம் தொடர்ந்து நீடிக்க பயிற்சியும், அதற்கான களங்களும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவசியம்.


