தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது அதில் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அதனைப் பார்த்த தெரு நாய்கள் மானை துரத்தி உள்ளது .
இதனை அடுத்து தர்மராஜ் மற்றும் பொதுமக்கள் துரத்திய நாய்களை விரட்டி விட்டு மானை பத்திரமாக பிடித்து கடையில் வைத்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
வனத்துறையினர் வந்து மானை பத்திரமாக மீட்டு வல்லநாடு மான்கள் சரணாலயத்தில் பத்திரமாக மானை விட்டனர். பேய்குளத்திற்கு வந்த வந்த மானை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்த மான் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மான் சரணாலய பகுதியில் இருந்து தவறி இப்பகுதிக்கு வந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


