திருச்செந்தூர் அருகே உள்ள நல்லூரில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 20 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நல்லூரில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் டிஎஸ்பி ராஜ முரளி தலைமையில் போலீசார் 10 பேர் நல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பத்து வீடு அருகே உள்ள காலி இடத்தில் சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதில் சுமார் 400 சாக்கு மூலைகளில் சுமார் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து லாரி மூலம் தூத்துக்குடி கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


