முதலூரில் திருநெல்வேலி திருச்சபையின் முதலாம் ரத்த சாட்சி தாவீது சுந்தரானந்தம் எனும் மறுபதிப்பு நூல் வெளியிடப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரின் தந்தை எனஅழைக்கப்படும் தாவீது சுந்தரானந்த்தின் 2560) வது ஆண்டு பிறந்த விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் “திருநெல்வேலி திருச்சபையின் முதலாம் இரத்த சாட்சி தாவீது சுந்தரானந்தம்” என்ற, கிறிஸ்துதாஸ் எழுதிய புத்தகம், திருநெல்வேலி வரலாற்று சங்கத்தினாரால் மறுபதிப்பு செய்யப்பட்டு முதலூர் திருச்சபையின் சார்பாக வெளியீட்டு ழா நடைபெற்றது. விழாவுக்கு வி! முதலூர் சேகர குருவானவர் ஏசுடியான்துரைசாமி தலைமை வகித்தார்.
பேராசிரியர் சுரேஷ் சாலமோன் வாழ்த்துரை வழங்கினர். முதல் பிரதியை சேகர குருவானவர் ஏசுடியான் துரைசாமி ஜெபித்து வெளியிட சேகர பொருளாளர் சாந்தராஜா பெற்றுக்கொண்டார். இதில் சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்கத் தலைவர் ஏ.கே. எஸ். சுந்தர்,பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அபிஷேக் நன்றி கூறினர்.


