தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கலியாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆலோசனையின் படி மாபெரும் மின்கொளி கபடி போட்டி நேற்று நடந்தது.
கபடிப்போட்டியை கருங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஒன்றிய துணைச்சேர்மனுமான லெட்சுமணப்பெருமாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலியாவூர் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் வரவேற்புரையாற்றினார். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், துணை ஆய்வாளர் ராபர்ட் ராஜா, கலியாவூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் கலியாவூர் சுற்றியுள்ள 31 கிராமங்களை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் பரமசிவம், கல்யாணசுந்தரம், கதிர்வேல், பால்பாண்டி, செல்வம் ,முருகன், பழனி, கண்ணன், மாரியப்பன், பிரபாகரன், ரமேஷ்,அம்மா பேரவை இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், உழக்குடி முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வெள்ளபாண்டி, அழகுமணிகண்டன், பேச்சிமுத்து, சுப்பையா, இசக்கிராஜா, இசக்கிமுத்து பாண்டியன், முத்துசாமி, லெட்சுமணன், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
போட்டி ஏற்பாடுகளை கலியாவூர் பகுதி அதிமுக நிர்வாகிகள், தங்ககல்யாணி மற்றும் வேல்முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.


