கன்னியாகுமரியில் காமராஜருக்கு 150 அடியில் அரசு சார்பில் சிலை. அரசர்குளத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கருங்குளம் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
நடந்த இந்த கூட்டத்திற்கு கருங்குளம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி செயலாளர் சபரி செல்வம் வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற பொறுப்பாளர் ஜான் ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சங்கர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பூத் கமிட்டி அமைப்பது உள்பட பல கருத்துக்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கல்குவாரி லாரிகளால் பழுதடைந்த ராமானுஜம்புதூர், அரசர்குளம் சாலையை அரசு உடனே சீரமைக்க வேண்டும், அரசர்குளம், வல்லகுளம், புதுக்குளம், மணல்விளை கிராமத்தின் சாலைகள் கல்குவாரியின் லாரிகளால் பழுதடைந்துள்ள சாலையை உடனே செப்பனிட வேண்டும், அரசர்குளம் கிராம இளைஞர்களின் நீண்ட நாள்கோரிக்கையான நூலம் அமைத்திட அரசை வலியுறுத்தவும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு அருகே பெருந்தலைவர் காமராஜருக்கு 150 அடி உயரத்தில் அரசால் சிலை அமைக்க வேண்டும், கருங்குளம் ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் நியமன படிவம், பூத் கமிட்டி படிவம், உறுப்பினர் சேர்க்கை படிவம் விரைவில் பூர்த்தி செய்து மாவட்ட செயலாளர் வசம் வழங்கப்பட வேண்டும் என்றும், மார்ச் 3ம் தேதி நடைபெறும் நம் இயக்கத்தின் பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றியத்துணைச் செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய வர்த்தக அணி செயாளர் ஜெபஸ்டின், ஒன்றிய இளைஞர் அணி துணைச்செயலாளர் சரத்பெருமாள், ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு அரிராமன் நன்றி கூறினார்.


